Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பு  தலைவர்கள், பொதுமக்கள் நாளை பசும்பொன்னிற்கு வருகிறார்கள்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) பசும்பொன்னில் நடைபெற இருக்கும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார்.இதையொட்டி முதல்-அமைச்சர் விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு செல்கிறார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!