திருச்சி மருங்காபுரி கே.பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(33). லாரி டிரைவரான இவர் தனது லாரியை கரியப்பட்டி கோபால் ஹோட்டல் அருகே நிறுத்தி விட்டு, லாரியிலேயே துாங்கி உள்ளார். துாங்கிக்கொண்டிருந்த போது லாரியில் டீசல் வாடை அடித்ததை தொடர்ந்து அவர் எழுந்து பார்த்துள்ளார். அப்போது லாரியின் டீசல் டேங்கை திறந்து ஒரு நபர் டீசல் திருடிக்கொண்டிருந்ததை தொடர்ந்து அவர் சத்தம் போட்டு உள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து டீசல் திருடிய திண்டுக்கல் நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த ராஜாமுத்து(29) என்பவரை கைது செய்தனர்.