Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில்
அவமரியாதையாகவும் மற்றும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அவதூறாக பேசியதற்கு அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் சிவராஜ் லாட்ஜ் எதிரில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் க.தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து 1,000-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு தவெக அரசைக் கண்டித்தும் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!