கேரளம் மாநிலம் திருச்சூரில் அரசு பஸ் தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. குன்னம்குளத்தில் இருந்து குருக்கம்பாறை பகுதிக்கு செல்லும் வழியில் அரசுப் பேருந்தானது முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் 13 பேர் காயமடைந்தனர். அரசுப்பேருந்தின் முன் பகுதியும், தனியார் பேருந்தின் பின் பகுதியும் பலத்த சேதமடைந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
