அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்று போட்டியிடும் ‘6 பேரையும் தோற்கடிப்போம்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளாராம். அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியபோது, ‘நம்ம கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து துரோகம் செஞ்சுட்டாங்க. அவங்களை வர்ற இடைத்தேர்தல்ல தோற்கடிக்கணும். விஜய் அலை வீசினபோதே, அந்த 6 தொகுதிகளையும் நாமதான் ஜெயிச்சோம். மறுபடியும் நாமதான் ஜெயிப்போம்’ என கூறியுள்ளாராம்.
