புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 136 பிறந்தநாள் விழா தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, திராவிடர் கழக தலைவரும், பல்கலைக் கழக வேந்தருமான கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புரட்சி கவிஞரின் புது உலகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குழு நடனம்,

பாட்டு ஆகியவை நடைபெற்றது, முன்னதாக செய்தியாளர்களிடம்
கி.வீரமணி கூறுகையில், கருத்துக்கணிப்புகள் எப்போதுமே பொதுவான ஒன்று, ஆனால்

அதைவிட நாங்கள் கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை நேரடியாக உணர்ந்தவன், எனவேதான் மீண்டும் ஆட்சி திமுகவிற்கு, காட்சி மற்றவர்களுக்கு என்று கூறினார், இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
