ஆட்சிக் கலைப்பு & கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 3 மாதமாவது தவெக ஆட்சி தாங்குமா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி மட்டுமே எழுப்பியிருந்தார். ஆனால், அதை திரித்து 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என சொன்னதாக செய்தி பரப்பப்படுகிறது என்றார். மேலும், புதிய ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
