Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி

போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். இம்முகாமில், கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ஹமீதுஅலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!