ஆப்பிரிக்க நாடான சூடானில், தெற்கு சூடான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அபியே பிராந்தியத்தின் சந்தையை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், சந்தைக்கு அருகிலிருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் குண்டுகள் விழுந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் 73 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சூடானில் டிரோன் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு
