அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.
வழக்கம்போல் நேற்றும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். சம்பவத்தன்று மனைவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. தண்ணீர்கொடுக்க தாமதப்படுத்தியதாக கூறி மனைவி ஜெயப்ரியாவின் கழுத்தில் தாம்பூல தட்டால் ஒங்கி வெட்டியுள்ளார். இதில் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஜெயப்பிரியா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ராஜா ஜெயப்பிரியா தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.