Skip to content
Home » துரை தயாநிதி உடல்நலம்…… முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

துரை தயாநிதி உடல்நலம்…… முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம்  சேர்க்கப்பட்டார்.

இன்று வேலூர் பிரசாரத்திற்கு சென்ற  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று  துரை தயாநிதியை சந்தித்து  உடல்நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் விசாரித்தார். சுமார் 30 நிமிடம் மருத்துவமனையில் இருந்த முதல்வர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அவரது மனைவி  துர்கா, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!