Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!