சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தன்ராஜ் மற்றும் சந்திரா என்பது தெரியவந்துள்ள நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களது மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதி சடலமாக மீட்பு
