Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ் ஸ்டாண்டில் நின்ற முதியவர் மினி டெம்போ மோதி பலி!-திருச்சி க்ரைம்

மினி டெம்போ மோதி முதியவர் சாவு


திருச்சி மருங்காபுரி முத்தளவார் பட்டி சேத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 77) இவர் சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு மினி டெம்போ அதிவேகமாக வந்து அவர் மீது பயங்கரமாக மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது பற்றி அவரது மகன் கணேஷ் பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் மினி டெம்போவை ஒட்டி வந்த மதுரை திருமங்கலம்
பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

செல்போனில் அரட்டை அடித்ததை கண்டித்ததால் +1 மாணவி தற்கொலை

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை ஆலத்தூர் காந்தி சாலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன் . இவரது மகள் கயல்விழி (வயது 15) இவர் பொன்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கயல்விழி படிப்பில் கவனம் செலுத்தாமல் தோழிகளுடன் அரட்டை அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்து வந்த தாயார் மகளைக் கண்டித்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கயல்விழி யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெற்றோர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கயல்விழி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி இளம் பெண் தற்கொலை

திருச்சி லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கன். இவரது மகள் தர்ஷினி (வயது 21)
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர் திருச்சி அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேண்டினில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் திடீரென வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு வேறு வேலை தேடி வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த தர்ஷினி யாரும் எதிர்பாராத வகையில் தனது தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது பற்றி அவரது தாயார் ஜீவிதா லால்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லால்குடி அருகே மதுவுக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை


திருச்சியில் லால்குடி சந்தைப்பேட்டை குடியான தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகர்ஜூனன் (வயது 33) மதுவுக்கு அடிமையான இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த நாகர்ஜுனன் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அவரது உறவினர் நடராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!