சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் திரண்டுவிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 துணை ஆணையர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு தீவிர பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
