பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மும்பையில் மருத்துவரை அணுகியபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பங்கேற்க இருந்த பெங்களூரு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிகழ்ச்சி செப்.12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்ரான் ஹாஷ்மியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்
