Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னணி நடிகர் தனுஷ் சமீபத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் முன்னிலையில், நற்பணி மன்றக் கொடி முறைப்படி அறிமுகம் செய்தார்.

நடிகர் தனுஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ரசிகர்கள் உற்சாக

கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட தலைமை தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில், நடிகர்

தனுஷின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினர் .

தொடர்ந்து சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டன. இதில் நற்பணி இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நடிகர் தனுஷின் பிறந்த நாளை உற்சாகமாகக்

கொண்டாடினர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பிரியாணி மற்றும் இனிப்புகளை பெற்றுச் சென்றனர்.

error: Content is protected !!