Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மண் எடுப்பதற்கு லஞ்சம்…விவசாயிகள் குற்றச்சாட்டு-தர்ணா

மண் எடுப்பதற்கு லஞசம்...விவசாயிகள் குற்றச்சாட்டு-தர்ணா

மண் எடுப்பதற்கு லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. இல்லை என்று மற்றொரு விவசாய சங்க விவசாயிகள் தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம். தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க கூடாது. ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்தாயிரம் வரை லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டி விவசாய சங்கத்தின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு விவசாயி குறைதீர்க்கும் நாள கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி பழனியப்பன் மண் எடுப்பதற்கு எந்த அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில்லை என அவர் தெரிவித்தார். இதனால் இரண்டு விவசாயி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.

error: Content is protected !!