Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி தரப் போகிறாயா என தகராறு செய்து தந்தை மற்றும் தாய் – பெரியம்மாள் 2 பேரையும் கட்டையால் தாக்கியுள்ளார். மேலும் அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார். அதிர்ச்சியான தந்தை சுப்பையா முசிறி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.  இப்புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கோகிலா வழக்கு பதிந்து காமராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!