பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான நடிகர் சித்தாந்த் கபூர் மற்றும் சிலரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அப்போது சித்தாந்த் கபூரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால், அவரும் மற்றவர்களும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சித்தாந்த் கபூர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கடந்த 2022ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
