Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 2 வீடுகளில் தீ விபத்து – பொருட்கள் எரிந்து நாசம்!

கரூரில் 2 வீடுகளில் தீ விபத்து – பொருட்கள் எரிந்து நாசம்!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா தெருவில் சந்திரசேகர் என்பவரது வீட்டின் உள் பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வீட்டினுள் இருந்த டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இதே போல் வெங்கடாசலம் சந்தில் குணா என்பவரது பூட்டிய வீட்டினுள் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வீட்டினுள் இருந்த டிவி, ஏர்கூலர், பிளாஸ்டிக் சேர்கள் என அத்தியாவசிய பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாதானங்களில் இருந்து வெளியேறிய மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!
Secret Link