Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி – அமைச்சர் மரியவில்சன்

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி - அமைச்சர் மரியவில்சன்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழாவிற்கு நிதி ஒதுக்குது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் பரிந்துரை செய்து முதல்வருக்கு அனுப்பும் கோப்புகள் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என கும்பகோணத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் .

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க

வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.

மகாமகம் 2028-ல் நடத்துவது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பார். அது அடிப்படையில் நிதி ஒதுக்குவது தொடர்பாக முடிவுகள்

செய்யப்படும்.

மாநிலத்தின் வருவாய் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக வரும் நாட்களில் லீக்கேஜ் அடைக்கப்படும். அந்த லீகேஜ்களை அடைத்தால் நன்றாக இருக்கும்.

கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து, தமிழக முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் முடிவு செய்வார். இது தொடர்பாக அனைத்தும்

அனைவருக்கும் விரைவில் தெரியவரும் என்றார் அவர்.

முன்னதாக நிதி அமைச்சர் தூய அலங்கார அன்னை ஆலயத்திலும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திலும் வழிபாடு நடத்தினார் .

நிதி அமைச்சருடன் வேளாண்மை துறை அமைச்சர் வினோத்தும் உடன் இருந்தார்.

முன்னதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத்

ஆகியோர் தூய அலங்கார அன்னை பேராலயம் மற்றும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

error: Content is protected !!