மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த ஆக.16-ம் தேதி தனியார் பள்ளி ஆசிரியை ராஜலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி, அவரது வாயில் துணியை திணித்து 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியை அன்னபூரணி மற்றும் அவரது கூட்டாளி கனிமொழி ஆகியோர் கைதாகியுள்ளனர். ராஜலட்சுமியுடன் நெருங்கி பழகிய அன்னபூரணி, அவரது வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்து இத்திட்டத்தை தீட்டியுள்ளார். அப்பகுதியில் இருந்த CCTV கேமரா காட்சிகளை வைத்து போலீசார் இருவரையும் பிடித்துள்ளனர்.
