Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360 குறைவு

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை இதற்குக் காரணமாகும். தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலையும் இந்தாண்டு உயர்ந்தது. வெள்ளி விலை இந்தாண்டு சுமார் 181% உயர்ந்துள்ளது..

தங்கம் விலை இந்த மாதம் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கி புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலை சென்னையில் கணிசமாகக் குறைந்தது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600க்கும், ஒரு சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.254க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.27,000 குறைந்து ரூ.2,54,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!