Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத் துணிச்சலான முறையில் ஒரு சதி வேலை அரங்கேறியுள்ளது.  வாரியத்தின் டெண்டர்கள், கொள்முதல் விவரங்கள் மற்றும் தற்போது நடந்து வரும் முக்கிய விசாரணைகள் தொடர்பான ரகசியத் தரவுகள் அடங்கிய குறைந்தது 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் (Hard disks) திருடப்பட்டுள்ளன.

மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் ஹார்டிஸ்குகள் திருடப்பட்ட சம்பவத்தில் அரக்கோணத்தை சேர்ந்த கோபிநாத் என்ற தற்காலிக ஊழியரை கைது செய்யப்பட்டுள்ளார். 11 மாத காலமாக மின்துறை தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்பு பணி பார்த்து கொண்டே ஹார்டிஸ்குகளை திருடி விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோபிநாத் ARM TECH நிறுவனத்தின் டீம் லீடாராவார். ஹார்டிஸ்குகளை யாருக்கு விற்பனை செய்தார்? என்பது தொடர்பாக கோபிநாத்திடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

error: Content is protected !!