Skip to content
Home » பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் வீரமணிதாசன். தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சபரி மலை ஜோதிமலை, எல்லாம் வல்ல தாயே, எங்க கருப்பசாமி போன்ற பாடல்கள் தற்போது வரை கோயில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத இடங்களை பிடித்துள்ளன. இவரது ஆன்மீக பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலையில் வழங்கப்பட்டு வரும் ஹரிவராசனம் விருதை பாடகர் வீரமணிதாசனுக்கு கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று  வழங்கினார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!