Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் சுற்று வட்டாரத்தில் கனமழை….

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய பலத்தமழை பெய்தது. மயிலாடுதுறை, தருமபுரம், மன்னம்பந்தல், குத்தாலம் மூவலூர், மங்கை நல்லூர், பெரம்பூர், வில்லியநல்லூர்,செம்பனார்கோவில், திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி, பாலையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் ஒரு

மணி நேரத்திற்கு மேலாக கன மழையானது பெய்து வருகிறது.

மாவட்டத்தில் 10.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 42 மில்லி.மீட்டர், மணல்மேடு 2.00 மில்லி.மீட்டர், சீர்காழி 3.60 மில்லி.மீட்டர், கொள்ளிடம் 5.00 மில்லி.மீட்டர், தரங்கம்பாடி 13.00, செம்பனார்கோயில் 65.80 மில்லி மீட்டர் மழை சராசரியாக 21 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த திடீர் கனமழையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!