Skip to content
Home » அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கௌதமி இன்று திருச்சியில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, ஆண்டாள் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டுல சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது மாணவர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மலைக்கோட்டை ஐயப்பன் பகுதி செயலர் அன்பழகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கௌதமி…

பிரச்சாரம் செல்லும் இடத்தில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது.
மாற்று கருத்துக்கு வாய்ப்பே இல்லை இரட்டை இலை சின்னத்துக்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது கண்டிப்பாக பெரிய மாற்றத்தை காண உள்ளோம்.

திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சின்னம் பொது மக்களிடம் செல்லவில்லை என்ற கேள்விக்கு

சின்னம் ரீச் ஆகாமல் ஒரு இருந்தாலும்.
தேர்தல் களத்தில் இறங்கி மக்களுடைய உறுப்பினராக பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிலர் என்னுடைய சொந்த விருப்பத்தோடு வரல கட்டாயத்தைப்படுத்தி நான் வந்தேன் என கூறுகின்றனர்.

நான் பார்த்த வகையில் நீங்கள் சொன்ன வேட்பாளர் அப்படிப்பட்டவர்.
நான் விருப்பத்திற்காக வரவில்லை கட்சி காப்பாற்ற வரவேண்டும் என கூறியுள்ளார்.
யாரைப் பார்த்து நான் உங்களுக்கு இருக்கேன் என்று சொல்கிறார்களோ அவர்கள் அப்பாவி மக்கள் மக்களுடைய உறுப்பினராக தேர்ந்தெடுக்க படனும் ஆசைப்படுகிற ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வேட்பாளரும் உண்மையில் முழு மனதோடு செயல்படுவதோடு, உறுதியோடு இருக்க வேண்டும் இல்லை என்றால் அது மக்களுக்கு செய்த அநியாயமாகவும், துரோகமாகவும் இருக்கிறது.

மோடி அடிக்கடி தமிழக வரலாறு என்ற கேள்விக்கு

நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது. சமீபகாலமாக வருகிறார் கடந்த 10 வருடத்தில் நம்

மாநிலத்தில் அவருடைய கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் யாரும் வந்ததில்லை.

பாஜக திமுக பெரிய கூட்டணி உடன் போட்டியிடுகிறது என்ற கேள்விக்கு

எதை வைத்து பெரிய கூட்டணி என்று எடை போடுகிறீர்கள்.
மிகப்பெரிய கூட்டணி என்பது மக்களோடு தான் இருக்க வேண்டும் இதில் மாற்று கருத்து இல்லை மகத்தான கூட்டணி எடப்பாடி யார் மக்களோடு வைத்துள்ளார்.

மகளிர்க்கு சம உரிமை தர வேண்டும் என்று எடப்பாடி கூறி உள்ளார் ஆனால் 3பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு

களத்தில் சரியான ஆட்களைகொண்டு செல்ல வேண்டும் அந்தத் தொகுதிக்கான சிறந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தொகுதிக்கு யார் சரியான உறுப்பினர் பார்த்து ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்
என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!