Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்

Exterior view of the historic Chennai High Court building under a bright sky on June 12 2026 following the order on Tamil Thai Vazhthu.

சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வழக்கை நீட்டிக்க வாடகைதாரர்கள் விருப்பப்படலாம் என்றும், ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் உதவக்கூடாது’ என்றும் தெரிவித்துள்ளார். அப்போது “வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும், தேவையற்ற  மனுக்களை  தாக்கல் செய்பவர்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.’வாடகைதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நடப்பது விரக்தியை ஏற்படுத்துவதாகவும்’ தெரிவித்துள்ள நீதிபதி, ’நவீன தொழில்நுட்ப உலகில் பொதுமக்களுக்கான நீதி பரிபாலன முறையிலும் எளிமையாக்கம் தேவை’ என்றார். தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலான நீதிபரிபாலன முறை, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். நீதித்துறை நடைமுறை, மனுக்களை கையாளும் முறை, உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை எளிதாக்குவது ஆகியவையே தற்போதைய தேவை” என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!