Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சர்வதேச யோகா போட்டி.. 2 தங்க பதக்கம் வென்ற கரூர் மாணவி

A talented female student from Karur holding two gold medals proudly at a felicitation event after winning the International Yoga Championship on June 12 2026.

குஜராத்தில் முதல் முறையாக, நடைபெற்ற சர்வதேச யோகா சேம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற கரூர் மாணவி ஹேமமாலினிக்கு யோகா ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2036 ஒலிம்பிக் போட்டிகளில், நாட்டின் பாரம்பரிய கலையான யோகாசன கலை போட்டிகள் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் முன்னோட்டமாக சர்வதேச அளவிலான முதலாவது யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஆறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமமாலினி

பங்கேற்று பாரம்பரிய ஆசனம்(தனி) பாரம்பரிய ஆசனம் குழு ஆகிய இரண்டு பிரிவுகளில் பங்கேற்று தங்க பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்கா, தென்ஆப்ரிக்கா, ஜாம்பியா, ரஷ்யா, ஜப்பான், ஒமன்,ரஷ்யா யுகாண்டா, கென்யா உள்ளிட்ட
79 நாடுகள் கலந்து கொண்டன.

இதில், இந்தியா சார்பாக தமிழ்நாடு சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 124 பேர் கலந்து கொண்டனர் .

102 தங்கம் , 9 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட114 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது இன்று கரூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஹேமமாலினிக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முறையான பயிற்சியும் தளராத அர்ப்பணிப்பும் இருந்தால் உலக அரங்கில் எந்தவொரு உயரத்தையும் எட்ட முடியும் என்பதை இந்த கரூர் மாணவி நிரூபித்துக் காட்டியுள்ளார். சர்வதேச மண்ணில் இந்தியாவின் தேசியக் கொடியையும், தமிழகத்தின் பெருமையையும் உயர்த்திய இந்த யோகா வீராங்கனைக்குத் தேவையான தொடர் உயர்தரப் பயிற்சிகளையும், நிதியுதவிகளையும் அரசு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இம்மாணவியின் அடுத்தகட்ட சாதனைகளுக்கு எமது ETamilNews குழுமத்தின் வாழ்த்துகள்.

📍 கரூர், ஜூன் 12, 2026 — ETamilNews நிருபர்

error: Content is protected !!