“தவறு செய்தால் விடமாட்டேன்” என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்ததாக, டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கையாகச் செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானதாக இருந்திருந்தால், புகார் அளிக்கச் சென்றவரைத் தாக்கிய பேரவைத் துணைத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘ஸ்ட்ரிக்ட் ஆபீசர்’ எனக் கூறப்படும் முதலமைச்சர் செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தது தானா? இதுதான் அந்தக் கடுமையான நடவடிக்கையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பஞ்ச் டயலாக் மட்டும் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை. உண்மையான நடவடிக்கை எடுத்து, தான் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
