Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை தொழிலதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சோதனையின்போது வீட்டின் அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து 4 கோடியே 10 லட்ச ரூபாயை  வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர் . மேலும் அவரது வீட்டில் இருந்து ஏர் கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன்  வருமானவரித்துறை சோதனை நடைபெறும் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!