Skip to content
Home » பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

  • by Senthil

இமயமலையில் காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் கொண்டது.  இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதிக்கொள்வது வழக்கம் உள்ளது. இந்தப் பகுதியில் கடுமையான குளிர் என்பதால் நமது ராணுவ வீரர்களுக்கு கடும் சவாலான பகுதி என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் சியாச்சினில் முதல்முறையாக, கேப்டன் சிவா சவுகான் என்ற இந்திய பெண் ராணுவ அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அங்குள்ள குமார் என்ற காவல் நிலையில், 3 மாத காலத்துக்கு அவர் பணியில் இருப்பார். ராணுவ என்ஜினீயர்கள் பிரிவைச் சார்ந்த சிவா சவுகான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது 11 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். ராணுவப் பணியில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றவர். சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகான்தான்.அவருக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!