Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தூர் டெஸ்ட்….கேப்டன் ரோகித் 12 ரன்னில் அவுட்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றார்.

தொடக்க ஆட்டகாரர்களாக கேப்டன் ரோகித்,  கில் ஆகியோர் இறங்கினர்.  இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். 22 பந்துகளில் 12 ரன் எடுத்திருந்த  ரோகித் இறங்கி வந்து அடிக்க முற்பட்டபோது  ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அவருக்கு பதில் புஜாரா களமிறங்கினார். 6 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி விவரம்:-  ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா அணி: உஸ்மன் கவாஜா, டிரவெஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் கென்ஸ்ட்காம், கமரூன் கிரீன், அலெக்ஸ் கார்னி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டுடி மொர்பி, மெதிவ் குஹ்னிமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!