குஜராத் மாநிலம் சூரத்த்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சிம்ரன், மகாத்மா காந்தி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் புகைப்படத்தை காட்டி ஆபாசமான செய்கைகளுடன் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிம்ரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூகவலைதள வீடியோவால் இன்ஸ்டாகிராம் பிரபலம் சிம்ரன் கைது
