Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கராத்தே வீரர்களின் சர்வதேச சாதனை…

சர்வதேச கியோகுஷின் ரியூ கராத்தே கூட்டமைப்பு சார்பில் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச கராத்தே போட்டியில் கரூர் மாவட்ட வீரர்கள் சிறப்பான சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 577 வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஐந்து பேர் கலந்து கொண்ட நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இடம்பிடித்திருந்தனர்.

14, 17, 18 வயது மற்றும் மாஸ்டர் பிரிவு எடைப் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் கரூரைச் சேர்ந்த நவதீரா, நந்தினி, தனுஸ்ரீ மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் ரோட்டேரியன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

14 வயது, 30 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட நவதீரா கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும், சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 14 வயது, 40 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட நந்தினி கட்டா பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 18 வயது, 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற தனுஸ்ரீ சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். பயிற்சியாளர் பிரிவில் சென்சாய் தமிழ்ச்செல்வன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையம் மற்றும் கரூர் ரயில்வே நிலையத்தில் கராத்தே மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் ரோட்டேரியன் தமிழ்ச்செல்வன், “இந்தியா சார்பில் ஐந்து பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றது பெருமைக்குரிய விஷயம். கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி பதக்கங்களுடன் நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

வீராங்கனை தனுஸ்ரீ கூறுகையில், “18 வயது பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளேன். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

error: Content is protected !!