கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போட்டதற்கு அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் நீக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.,வின் இயக்கத்திற்கு கிடைத்த சான்று. கையெழுத்து இயக்கம் அரசியல் புரட்சியாக மாறி இருக்கிறது. பா.ஜ., தீண்டத்தகாத கட்சி. நோட்டா கட்சி. பா.ஜ., வந்ததால் தோற்றோம் என்றவர்கள் இன்று பா.ஜ., வேண்டும் என தவம் இருக்கும் சூழ்நிலையை தலைவர்களும் தொண்டர்களும் உருவாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. பா.ஜ., இல்லாமல் அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாகி உள்ளது. மற்றபடி எந்த கட்சியையும், தலைவரையும் குறைத்து பேசவில்லை. யார் முதல்வர், யார் முக்கிய கட்சி, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. இன்றைக்கு தே.ஜ., கூட்டணி பலமாக இருக்கிறது இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..
- by Authour

Tags:Annamalai answer to EdappadiBJP state president AnnamalaiCoimbatore airportஅண்ணாமலை எடப்பாடிக்கு பதில்கோவை ஏர்போர்ட்பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை