கருணாநிதி, ஜெயலலிதா சாதனையாளர்கள் எம்.ஜி.ஆருடன் விஜயை ஒப்பீட்டு தகுதியானவரா என்பதை காலம் கவனித்து கொண்டு இருக்கிறது
நடிகர் தம்பி ராமையா பேட்டி
சென்னை விமான நிலையத்தில் நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் சிறந்த மனிதர்களை எண்ணி விடலாம். அதில் தலையா மனிதர் தேவா. அவர் உடை மட்டும் வெள்ளை அல்ல. உயர்த்த இடத்திற்கு வந்த பின் தன் உடன் பிறந்தவர்களை கவனிக்க மாட்டார்கள். ஆனால் தன் சகோதர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று கூறியவர் தேவா.
முதன் முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து உள்ளனர். 4 மாதங்கள் முடிந்து உள்ளது. செங்கோட்டையன் தவிர மற்றவர்கள் புது முகங்கள். அதிகாரிகளை எப்படி கையாளவது தான் நிர்வாகம். அதிகாரிகளை எப்படி கையாளவது குறித்து அறிந்து வருகின்றனர். போக போக சரியாகி விடும்.
தனது வெற்றிடத்தை காற்று நிரப்பி கொள்ளும் என்பார்கள். கருணாநிதி. ஜெயலலிதா சாதனையாளர்கள். கலைஞர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர். ஜெயல்லிதா இலக்கணமாக இருந்தவர். விஜய் தற்போதுதான் நுழைந்து உள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு இணையாக ஒப்பீட்டுவதை காலம் கவனித்து கொண்டு இருக்கிறது. ஒப்பீட்டு விஜய் மீது அன்பு கொண்டவர்களின் வேலையாக இருக்கலாம். ஒப்பீட்டுக்கு தகுதியானவர்களா என்பதை காலம் கவனித்து கொண்டு உள்ளது. அதற்கான சூழலை அவர் வகுத்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
