காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ.11) அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பிட்ட மருத்துவமனையில் மூத்த ஹமாஸ் பயங்கரவாதி பதுங்கியிருந்ததாக கூறி தாக்குதல் நடத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம், அது தொடர்பான எவ்வித ஆதாரங்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
