Skip to content
Home » அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா மற்றும் பலர்  சந்தித்தனர்.
சிறு பான்மை பள்ளிக் கூடங்கள் தொடர்பான சிறுபான்மை மொழித் தேர்வுகள், சிறுபான்மை  சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் முன்வைக்கப் பட்டன.
இதில் ஒமியத் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹம்மது கத்தீப், நையீம், இக்பால் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளிக் கல்வி இயக்குனரும் சந்திப்பில் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!