கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருவீதி விழா நடைபெற்றது, தொடர்ந்து சப்த ஏழு கன்னிமார்களுக்கும் நெய் தீபம் கட்டப்பட்டது,18-படிகளுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் நறுமணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபம் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கரூர் மாநகர் மற்றும் அதன்
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கும் விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் பூக்குழி விழாவில் நேர்த்தி கடனை செய்தனர். இதில் ஐயப்ப பக்தர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு ஐயப்பனை மனம் உருகி வழிபட்டனர்.