Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

 

கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேருந்து கட்டுமான பணி நடைபெற்று வந்த பொழுது திடீரென பேருந்து தீ பற்றி எரிந்ததால் உள்ளே ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளார். அருகில் இருந்த நபர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன்

அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து கட்டுமான பணிக்குள் ஈடுபட்டிருந்த செல்லாண்டி பட்டி பகுதியைச் சார்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!