Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அனுமதியை மீறி கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது, மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களை சந்திக்க இருந்தார். செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக பாஜகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!