Skip to content
Home » சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிறுவனுக்கு பரிசோதித்து பார்த்ததில் அவனுக்கு Acute Lympho Blastic Leukemia என்ற அறிய வகை ரத்த புற்று நோய் இருப்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார்

மருத்துவமனையில் அனுமதித்து கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்களிடமிருந்த சேமிப்புகள் எல்லாம் செலவழிக்கப்பட்ட நிலையில் மேற்கொண்டு செலவு செய்ய போதிய நிதி வசதி இல்லை என்றும், எனது மகனுக்கு உரிய மேல் சிகிச்சையை மாவட்ட நிர்வாகம் அளிக்க முன்வர வேண்டும் எனக் கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த தாயும், மகனும் கதறி அழுதனர்.

இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் பிரபு சங்கர் அச்சிறுவனுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!