Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவில்  தேர்தல் பணி ஒருங்கி்ணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்கள் உதயநிதி,  எவவேலு, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உள்ளனர். இந்த குழு தினமும்  இரண்டு, மூன்று மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகளை நேரில் அழைத்து  கருத்து கேட்டு வருகின்றனர்.

இன்று காலை கரூர் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து  கேட்டனர். அப்போது அவர்கள், கரூர் தொகுதியை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு  ஒதுக்க கூடாது. அவராது தொகுதி முழுவதும் கூட்டணி கட்சிகளுக்குள்ளும், மக்களிடமும்  பல பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளது. அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்பை சந்தித்து உள்ளார். எனவே இந்த முறை கரூர் தொகுதியை தி்முகவுக்கு ஒதுக்குங்கள் என்றனர்.

இதைக்கேட்டுக்கொண்ட  தேர்தல் பணி குழுவினர், நீங்கள்  ஊருக்கு சென்று இப்போதே தேர்தல் பணியை  தொடங்குங்கள். எந்த கட்சிக்கு  தொகுதி ஒதுக்குவது என்பதை  முதல்வர் தான் முடிவு செய்வார். உங்கள் கோரிக்கைகள் முதல்வருக்கு தெரிவிக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!