Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பது போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்

கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3 கூடைப்பது போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதில் கோவை,கரூர், திண்டுக்கல் ,சேலம் ,மதுரை, ஈரோடு ,நாமக்கல், திருச்சி அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்‌.

இந்த போட்டி முழுவதும் லீக் முறையில் நடைபெறுகிறது கடைசி நான்கு போட்டிகள் மட்டும் நாக்கோட் முறையில் நடைபெறும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!