Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.

பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்வதற்காக சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று

அதிகாலையில் பெய்த கனமழையின் காரணமாக அச்சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

சுமார் 6 மாத காலமாக அப்பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் இதே நிலை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரூரிலிருந்து வாங்கல் வழியாக நாமக்கல், சேலம், திருச்சி செல்லும் சாலை என்பதால் விரைந்து சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!