Skip to content
Home » கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு
மண்டல அலுவலர்கள்,துணை மண்டல அலுவலர்கள் தேர்தல் அதிகாரி,காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், வட்டாட்சியர்கள் முன்னிலையில்

 

வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்துக்குட்பட்ட 10 முதல் 12 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர்.மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

20 வாகனங்களில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மற்றும் 300 -க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!