Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில், விஷன் – 2030 50k என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிவேக நடை போட்டியில் பொதுமக்களுடன் சேர்ந்து நடந்து சென்றார்.

கரூா், திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் 5 கி.மீ.,10 கி.மீ. என இருவகையான மாரத்தான் போட்டிகளும், குழந்தைகளுக்கு 5 கி.மீ. தொலைவு போட்டிகளும் நடக்கின்றன.

அதிவேக நடை போட்டி 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற உள்ளது. இரு போட்டிகளிலும் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேலானோர் போ் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!