Skip to content
Home » கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

  • by Senthil

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் தஞ்சை மாவட்டத்தில் 22 இடங்களில் நடைபெற்றது.

முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்தி, விபத்து கால மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். விபத்து மரணம், இயற்கை மரணம், கல்வி நிதி, திருமண உதவி உள்ளிட்ட உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் விண்ணப்பித்த நாளிலிருந்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை உயர்த்தி, ஓய்வூதியம் ரூ. 6000 ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மாத காலம் பேறு கால

விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி மனுவை திருப்பி அனுப்பாமல், விண்ணப்பத்தை ஏற்று நலத்தொகைகளை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து வேலைகளிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 90% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது பிடித்தம் செய்யப்படும் ஒரு சதவீத நல நிதியை ஐந்து சதவீதமாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும். ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிகழ்விற்கு சங்க துணைத் தலைவர்கள் செல்வம், சிகப்பியம்மாள் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா, நிர்வாகி கல்யாணி, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார் . நிர்வாகிகள் சுந்தரராஜ், சரவணன் சி.தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல பாபநாசம் சீனி சுகுமாரன், வங்காரம்பேட்டை. சௌந்தரராஜன், கபிஸ்தலம் ராமஜெயம், தெற்குகோட்டை செல்வராஜ் ,சங்கரநாதர் குடிகாடு த.குமார் ஆகியோர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!